முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் அ.தி.மு.க.,வேட்பாளர் புத்தி சந்திரன் தீவிர பிரச்சாரம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, மார்ச்.- 30 - ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் புத்தி சந்திரன் நேற்று காலை முதல் ஊட்டி ஊரகப் பகுதிகளான உயிலட்டி, கூக்கல்தொரை, கூக்கல், பேட்லாடா காலனி, பொன்நகர், மசக்கல், தீனட்டி உட்பட பல கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் முன்னாள் பால்வளத்தலைவர் எல்.மணி, ஊட்டி ஒன்றிய செயலாளர் கடநாடு குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பலராமன், பேரவை ஒன்றிய செயலாளர் மாயன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராமைய்யா, கம்பட்ட பெள்ளராஜ் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க, மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து மாலையில் ஊட்டி காந்தல் பகுதிக்குட்பட்ட வார்டு எண் 22 முதல் 25 வரையிலான பகுதியில் வீடுவீடாக சென்று வாக்குகளை சேகரித்தார். அவருக்கு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது முன்னாள் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் டி.கே.தேவராஜ், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் அனந்தகிருஷ்ணன், ராஜகோபால், கிளைச்செயலாளர்கள் கிறிஸ்டோபர், சிராஜ், சரவணன் உட்பட பலர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்