முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 5 - ராஜ்யசபை உறுப்பினராக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு உலக சாதனைகளையும், சரித்திரங்களையும் படைத்த பிரபல இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா, பிரபல தொழில் அதிபர் அனுஅகா ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் ராஜ்யசபை உறுப்பினர்களாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நியமனம் செய்தார். இதையடுத்து நேற்று ராஜ்யசபை தலைவர் ஹமீது அன்சாரி அறையில் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபை  உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமல்ல, இதர விளையாட்டுக்களுக்கும் தான் உதவிகளை செய்யப்போவதாக தெரிவித்தார். கடந்த 22 ஆண்டுகால  சர்வதேச அனுபவத்தில் கிரிக்கெட் விளையாட்டு எனக்கு மகத்தான பெயரை பெற்றுத்தந்துள்ளது என்றும், பிற்காலத்தில் கிரிக்கெட்டுக்கு நான் என்னால் ஆன சேவைகளை செய்வேன் என்றும் அவர் கூறினார். எனது முயற்சிகளுக்கு சில இடையூறுகள் வரலாம் என்று நான் நம்புகிறேன். எனது சக எம்.பி.க்கள், அரசு நிர்வாகிகள், ஊடக நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகியோரின் உதவியோடு நான் இந்த இடையூறுகளை களைந்து சேவைகளை செய்வேன் என்றும் அவர் கூறினார். எல்லோரும் சேர்ந்து ஏராளமான மாற்றங்களை கொண்டுவரலாம்  என்றார்.  பதவியேற்பு நிகழ்ச்சியின்போது சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் உடனிருந்தனர். கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் பிசியாக இருக்கும் நீங்கள், ராஜ்யசபை உறுப்பினர் பதவியில் சேவை செய்வதற்கு நேரம் கிடைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒரு நியமன உறுப்பினர். என்னை ராஜ்யசபை உறுப்பினராக்குங்கள் என்று நான் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை. இது ஒரு நியமன பதவி. ஒரு கெளரவம். அதை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கிரிக்கெட் வீரனாக இருந்ததால்தான் நான் இப்போது ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஒருபோதும் எனது கவனத்தை திசைதிருப்ப மாட்டேன். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, இதர விளையாட்டுக்களுக்கும் நான் உதவி செய்வேன் என்றும் அவர் கூறினார்.
நடிகை ரேகா, தொழில் அதிபர் ஆகா ஆகியோர் கடந்த மே மாதமே ராஜ்யசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago