முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆன்டி முர்ரே, விட்டோவாகாலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 6 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். - 6 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்ன ணி வீரரான ஆன்டி முர்ரேவும், மகளிர் பிரிவில் விட்டோவாவும் 4-வது சுற்றி ல் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த வருடத்தின் 2-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டி ன் தலைநகரான பாரிசில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து ள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர் கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவும், பிரான்ஸ் வீரர் ரிச்ச ர்ட் காஸ்குயிட்டும் மோதினர். இந்த ஆட்டத்தில் அனுபவமிக்க வீரரா  ன முர்ரே சிறப்பாக ஆடி, 1 -6, 6- 4, 6- 1, 6- 2 என்ற செட் கணக்கில் ரிச்சர்ட்டை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந் தார். மற்ற போட்டிகளில் டேவிட் பெர்ரர், சாங்மா, ஜோவில் பிரட், நிக்கோலஸ், அல்மாக்ரோ, ஜூயன் மார்ட்டின், டெ ல்போர்ட்டோ, ரபேல் நடால் ஆகி யோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.  மகளிர் ஒற்றையர் பிரிவில் ஹனீபி - அரந்தாரஸ் ஆகியோர் மோதினர். இதில் ஹனீபி நன்கு ஆடி, 6- 1, 4 - 6, 6 - 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலி றுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4 -வது சுற்று ஒன்றில், செக். குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவாவும், அமெரிக்க வீராங்க னை வார்வராவும் மோதினர். 

இந்தப் போட்டியில் செக். வீராங்கனை பெட்ரா அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். இறுதியில் அவர் 6-2, 6- 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வின் மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஜோடி காலிறுதியில் வெற்றி பெ ற்று அரை இறுதிக்கு முன்னேறியது. 

-----------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்