முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிரி மீது சுப்ரமண்யசாமி குற்றச்சாட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 31 - அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்ட கொலை குற்றவாளிகளை அழகிரி தேர்தலில் பயன்படுத்துவதாக  ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமண்ய சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி விசாரித்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:-

கடந்த 2009-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு 1405 ஆயுள்தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது. இது குறித்து சுப்ரமண்ய சாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் விடுதலையான குற்றவாளிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று இடைக்கால உத்தரவு உள்ளது.

இந்நிலையில் நேற்று சுப்ரமண்யசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று உத்தரவு உள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் அழகிரியுடன் கொலைக் குற்றவாளிகள் செல்கின்றனர். ஜனதாகட்சி வேட்பாளரை மிரட்டுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி கவுந்சிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதானவர்களும் முன்னாள் தி.மு.க. அமைச்சர் கொலை வழக்கில் கைதான அரசியல் கொலை குற்றவாளிகளை பயன்படுத்துகிறார். அரசியல் பிரச்சாரத்தில் கொலை குற்றவாளிகள் ஈடுபடகூடாது என்ற கடுமையான உத்தரவை அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மனு அளித்தார்.

நேற்று இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஓய் இக்பால், நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் ஹைக்கோர்ட் உத்தரவை பின்பற்றுவதாக உறுதி கூறப்பட்டது. இதையொட்டி இந்த வழக்கை ஜூன்-15 தேதிக்கு நீதிபதிகள் ஒத்து வைத்தனர். பின்பு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுப்ரமண்ய சாமி தென் மாவட்டங்களில் 54 தொகுதிகளில் தோற்று விடுவோம் என்ற பயம் அழகிரிக்கு வந்துவிட்டது.

எனவே அரசியல் ரவுடிகள் துணையுடன் தேர்தல் வேலையில் பாடுபடும் எங்கள் கட்சி வேட்பாளர்களை மிரட்டுகிறார். அதற்கு தடைகேட்டு கோர்டுக்கு வந்தேன். அண்ணா பிறந்தநாள் என்ற பெயரில் ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

இவ்வாறு சுப்ரமண்யசாமி கேள்வி எழுப்பினார்.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கும் ஏர்செல் நிறுவனத்திற்கு தொடர்பு உள்ளது. சி.பி.ஐ. வழக்கு விசாரணை திருப்திகரமாக உள்ளது. 85 ஆயிரம் பக்கம் சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய உள்ளதால் அதை தயாரிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளனர்.

இவ்வாறு சுப்ரமண்யசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்