முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டி தரவரிசை: கோக்லி தொடர்ந்து 3-வது இடம்

வெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஜூன். 8 - ஐ.சி.சி.யின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரரான விராட் கோக்லி தொட ர்ந்து 3-வது இடத்தை தக்க வைத்து இரு க்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டியின் அடி ப்படையில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் மேற்கண்ட விவரம் தெரிய வந்துள்ளது. 

இந்தப் பட்டியலில் விராட் கோக்லி மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து 3- வது மற்று ம் 4-வது இடத்தில் உள்ளனர். கோக்லி 846 புள்ளிகளுடனும்,தோனி 752 புள்ளி களுடனும் உள்ளனர். 

மற்ற இந்திய வீரர்களில் காம்பீர் 17 - வ து இடத்திலும்,சேவாக் 25 -வது இடத்தி லும், டெண்டுல்கர் 27- வது இடத்திலும் உள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹாசிம் அம் லா 871 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தென் ஆப்பிரிக் கா வீரரான டிவில்லியர்ஸ் 851 புள்ளி கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். 

இலங்கை வீரர் சங்கக்கரா, இங்கிலாந் து வீரர் ஜோனாதன் டிராட், ஆஸ்திரே லிய வீரர்கள் கிளார்க், வாட்சன், பாகி ஸ்தான் வீரர் உமர் அக்மல் ஆகியோர் முறையே 5 முதல் 10 இடங்களில் உள்ளனர். 

பந்து வீச்சு தரவரிசையில் அஸ்வின் 6-வது இடத்தைப் பிடித்தார். தென் ஆப் பிரிக்கா வீரர் சோட்சோபே 743 புள்ளி கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல், தென் ஆப்பிரிக்கா வீரர் மார்னே மார்கெல், பாக். வீரர் ஹபீஸ், இங்கிலாந்து வீரர் ஸ்வான் ஆகியோர் 2 முதல் 5-வது இட ங்களைப் பிடித்தனர். 

நாடுகளுக்கான தரவரிசையில் இந்தி யா 117 புள்ளிகள் பெற்று 3-வது இடத் தில் உள்ளது. ஆஸ்திரேலியா 123 புள்ளி களுடன் முதல் இடத்திலும், தென் ஆப் பிரிக்கா 118 புள்ளிகளுடன் 2- வது இட த்திலும் உள்ளன. 

இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மே.இ.தீவுகள், நியூசிலாந்து, வங்காள தேசம், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 10 - வது  இடங்களைப் பிடித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்