முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மொகாலி, மார்ச். - 31 -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடைபெற்ற பரபரப்பான 2 -வது அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி 29 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு 3 - வது முறையாக முன்னேறியது. இந்தப் போட்டியில் டெண்டுல்கர் அபாரமாக பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார். அவருக்கு பக்க பலமாக சேவாக், காம்பீர், தோனி, மற்றும் ரெய்னா ஆகியோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, ஜாஹிர்கான், முனாப் படேல், ஹர்பஜ ன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் நன்கு பந்து வீசி முக்கிய விக் கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.  உலகக் கோப்பைக்கான 2 -வது அரை இறுதி ஆட்டம் சண்டிகார் மாநி லத்தில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் செ ய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில் அதிரடி வீரர் சேவாக் மற்றும் டெண்டுல்கர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இந்திய அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழ ப்பிற்கு 260 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சத மும், 4 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் அதிகபட்சமாக, 115  பந்தில் 85 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் சயீத் அஜ்மல் வீசிய  பந்தில் சாகித் அப்ரிடியிடம்கேட்ச் கொடுத் து வெளியேறினார். அவர் சத வாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களுக் கு ஏமாற்றத்தை அளித்தது. 

துவக்க வீரர் சேவாக் 25 பந்தில் 38 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். சுரேஷ் ரெய்னா 39 பந்தில் 36 ரன்னை எடுத்தார். தவிர, காம்பீர் 32 பந்தில் 27 ரன்னையும், கேப்டன் தோனி 42 பந்தில் 25 ரன் னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி தரப்பில், வகாப் ரியாஸ் 46 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். சுழற் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் 44 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மொகமது ஹபீஸ் 1 விக்கெட் எடுத்தார். 

பாகிஸ்தான் அணி 261 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்திய அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 231 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்திய அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி க்குள் நுழைந்தது. இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது இது 3 -வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி தரப்பில் மிஸ்பா உல் ஹக் 56 ரன்னையும், மொக மது ஹபீஸ் 43 ரன்னையும், அசாத் சபீக் 30 ரன்னையும் உமர் அக்மல் 29 ரன்னையும் எடுத்தனர். மிஸ்பா உல் ஹக் கடைசி வரை போராடினா ர். கடைசி விக்கெட்டாக அவர் ஆட்டம் இழந்தார். 

இந்திய அணி தரப்பில், ஜாஹிர்கான் 2 விக்கெட்டையும், முனாப் படேல் 2 விக்கெட்டையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டையும், யுவ ராஜ் சிங் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago