முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து தகவல்களை மறைத்த தங்கபாலு வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிடவேண்டும்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 31 - மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தங்கபாலு சொத்து கணக்குகளை மறைத்துள்ளதாகவும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட கேட்டும் பி.ஜே.பி. வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு செய்துள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:- மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கபாலு வேட்பாளராக போட்டியிடுகிறார் காங்கிரஸ்  கட்சி அறிவித்த அதிகாரப்பூர்வ பட்டியலில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி பெயர் இருந்தது. இது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் வேட்பாளர் பட்டியல் குளருபடி காரணமாகவும், காங்கிரசார் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் காங்கிரசார் போட்டி மனுதாக்கல் செய்தனர். பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை மாற்றக்கோரி மறியல் உண்ணாவிரதம் என இருந்தனர். சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் தங்கபாலு உருவபொம்மைகளை கொளுத்தினர். சத்யமூர்த்தி பவன் சூறையாடப்பட்டது. தங்கபாலு வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார் தங்கபாலுவை வெளியே வரவிடாமல் முற்றுகையிட்டனர்.

இதனிடையே தங்கபாலுவின் மனைவி ஜெயந்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது. மாற்று வேட்பாளரான தங்கபாலுவி மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பிறகுதான் தங்கபாலு மாற்று வேட்பாளர் என்ற உண்மையே மயிலாப்பூர் காங்கிரசாருக்கு தெரிய வந்தது. இதனால் வெகுண்ட காங்கிசார் மகளிர் காங்கிரஸ் தலைவி சிவகாமியை போட்டி வேட்பாளராக நிறுத்தனர்.

அ.தி.மு.க. சார்பில் ராஜலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாதி தொகுதி பிரச்சாரத்தை முடித்து விட்டார். இதனிடையே மயிலை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் வானதி சீனிவாசன் நேற்று உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில் அவர் கூறியிருந்தாதவது:-

தங்கபாலு வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து கணக்கு விபரங்களில் உண்மைகளை மறைத்துள்ளார். தனது மனைவி ஜெயந்தியின் சொத்து விபரங்களை முறையாக தாக்கல் செய்யவில்லை.

தங்கபாலுவின் மனைவி மெகா தொலைக்காட்சியின் பங்கு தாரராக உள்ள சொத்து விபரம் தெரிவிக்கவில்லை. அதேபோல் ஜெயந்தி பொன்னியம்மன் கல்வி அறக்கட்டளையின் வாழ்நாள் டிரஸ்டியாக உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் பொறியியல் கல்லூரி மற்றும் பல நூறு ஏக்கர் உள்பட ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது. இது குறிப்பிடப்படவில்லை. ஆகவே தங்கபாலுவின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளபட உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்