முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து 3 கோல் போட்டு வெற்றி

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கீவ் (உக்ரைன்), ஜூன். 17 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3- 2 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

சுவீடன் அணி  2 தோல்வியைப் பெற்றதால் போட்டியில் இருந்து வெளியே ற்றப்பட்டது. அந்த அணி முதல் போட்டியில் உக்ரைனிடம் தோற்றது. 

14 -வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்தப் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி அணிகள் களத்தி ல் குதித்து உள்ளன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 

யூரோ கோப்பை போட்டியில் பங்கே ற்று வரும் முன்னணி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். 

உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில் நேற்று நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தி ல், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி சிறப்பாக ஆடியது. இறுதியில் அந்த அணி 2- 0 என்ற கணக்கில் உக்ரைன் அணியை தோற்கடித்தது. 

முன்னதாக நடந்த முதல் பாதியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி தாக்குதல் நடத்திய போதிலும் இரு அணிகளாலு ம் கோல் போட முடிய வில்லை. 

பின்பு நடந்த 2 -வது பாதியில் பிரான்ஸ் வீரர்களான மெனீஷ் 53 -வது நிமிடத்தி லும், கேபேய் 58- வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். உக்ரைன் அணியால் ஒரு கோல் கூட போட மடியாமல் போனது ஏமாற்றமே. 

பிரான்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 1- 1 என்ற  கணக்கில் டிரா செய்தது. 

உக்ரைன் அணிக்கு இது முதல் தோல்வி யாகும். அந்த அணி தொடக்க ஆட்டத் தில் சுவீடன் அணியுடன் மோதியது. இதில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றி பெ ற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருந்தது. 

இறுதியில் இங்கிலாந்து அணி பரபரப் பான ஆட்டத்தில் 3 - 2 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்தது. சுவீடன் இந்தத் தோல்வியால் போட்டி யில் இருந்து வெளியேறியது. 

இங்கிலாந்து அணி தரப்பில், 23-வது நிமிடத்தில் கரோலும், 64-வது நிமிடத் தில் வால்காட்டும், 78 -வது நிமிடத்தில் டேனிவெல்பெக்கும் கோல் அடித்தனர். 

சுவீடன் அணி சார்பில், 59-வது நிமிடத் தில் மெல்பெர்க் கோல் அடித்தார். மு ன்னதாக 49-வது நிமிடத்தில் இங்கிலா ந்து வீரர் ஜான்சன் சேம்சைடு கோல் அடித்தார். இறுதியில் சுவீடன் 3-வது கோலை போட செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்