முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் இரவில் பயமின்றி தனியாக செல்ல ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்குங்கள் - கோகுல இந்திரா

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 31 - பெண்கள் இரவில் பயமின்றி தனியாக செல்ல ஜெயலலிதாவை மீண்டும்  முதலமைச்சராக்குங்கள் என்று அண்ணாநகரில் கோகுல இந்திரா வாக்கு சேகரித்தார். அண்ணாநகர் அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலஇந்திரா, நியூ ஆவடி ரோடு, மண்டபம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில்வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவர், அப்பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளுக்குள் சென்றும் ஓட்டு கேட்டார். அவரை குடிசைப்குதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களிடம் கோகுல இந்திரா குறைகளை கேட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு போன்ற பொருட்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது. 

இரவு நேரங்களில் ரவுடிக் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களால் அண்ணாநகர் தொகுதியில் இரவில் தனியாக செல்ல முடியாதநிலை உருவாகி விட்டது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டு கோள் விடுத்தனர். அதை பொறுமையுடன் கேட்ட கோகுல இந்திரா ஜெயலலிதா முதலமைச்சாரனதும் அவரிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கோகுல இந்திரா ஒவ்வொரு வீடாகச் சென்று ஜெயலலிதாவை முதலமைசாராக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள், சென்னையில் சட்டம் ஒழுங்கை சீரமைக்க அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் என்று கூறினார்.

கோகுல இந்திராவின் எளிமை, பொறுமை, அணுகுமுறை அண்ணாநகர் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. செல்லும் இடமெல்லாம் கோகுல இந்திராவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் பலர் அவருக்கு மல்லிக்கைப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

பிரச்சாரத்தில் கோகுல இந்திரா பேசும்போது கூறியதாவது:-

சென்னையில் வசிப்போர் மாதந்தோறும் கேபிள் டி.வி.க்கு அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது. ஜெயலலிதா முதல்வரானால் கேபிள் டி.வி. அரசுடமைக்காப்பட்டு மிகக்குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும், பிளஸ்-1, பிளஸ் -2 படிக்கும் மாணவர்களுக்கு​லேப்டாப் வழங்கப்படும்.

இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.

அவருடன் தென் சென்னை மாவட்ட அவவைத்தலைவர் வ.கோதண்டராமர், மாவட்ட துணை செயலாளர் சுகுமார்பாபு, அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாணவர் அணி செயலாளர் அனிஷ்குமார், அண்ணாநகர் பகுதி செயலாளர் ஏ.இ.வெங்கடேசன், பொருளாளர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோகுல இந்திரா நேற்று காலை 67-வது வட்டத்தில் ஓட்டு சேகரித்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் கூடல் கோவிந்தன் சிறப்பாக செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்