முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா, இந்த தேர்தலில் எடுபடாது- ஜி.ராமகிருஷ்ணன்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 31 - தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை ஏற்படாது. அ.தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும் என இ.கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெவித்துள்ளார்.  இ.கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது; எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சியாக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.என தேர்தல் ஆணையத்தை முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் உள்ளது.  மதுரையில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். லஞ்சம் வாங்காமல் ஓட்டு போடவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய கலெக்டரின் உருவ பொம்பையை எரிக்கின்றனர். அவருக்கு மிரட்டல் விடப்படுகிறது. நேர்மையாக செயல்படும் கலெக்டரோ, போலீஸ் அதிகாரிகளோ மதுரையில் பணிபுரிய முடியாது. இந்த தேர்தலில் திருமங்கலம் இடைத்தேர்தலின் பார்முலா எடுபடாது. தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளையும் மீறி பணம் கோடிக்கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகளே தங்களது வாகனத்தில் பணத்தை எடுத்து கொண்டு சென்று வாக்களாளர்களுக்கு கொடுத்து வருவதாக தேர்தல் ஆணையம் தன்னுடைய மனுவில் கூறியுள்ளது. அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ஆதாரம் கோர்ட்டில் மட்டும் இருந்து விடாமல் பொதுமக்களின் பார்வைக்கும் காட்டப்படவேண்டும்.  தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதல்வர் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை. தனிஒருகட்சியின் ஆட்சியைத் தான் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். 

தி.மு.க.119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஜெயித்தாலும் கூட தனியாக ஆட்சி அமைக்க முடியாது.

அந்த கூட்டணியிலேயே எதிரலை வீசுகிறது. அ.தி.மு.க. கூட்டணி தனிப்பொரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை ஏற்படாது. ஆட்சி மாற்றம் எழுவது பற்றி நோக்கம் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. இவ்வறு அவர் கூறினார். 

அப்போது அவருடன் நன்மாறன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிராம், செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் உள்பட பலர் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்