முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வேட்பாளர் முத்துராமலிங்கம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,மார்ச்.- 31 - திருமங்கலம் நகர, ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க.வேட்பாளர் ம.முத்துராமலிங்கம் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

 அப்போது ஏராளமான பெண்கள் திரண்டுவந்து வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர்.  திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக ம.முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். இவரை கழகப்பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவித்தநாள் முதலாக திருமங்கலம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்குச்சேகரித்து வருகிறார் இந்நிலையில் நேற்று காலை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து திருமங்கலம் நகர் பகுதி பிரச்சாரத்தை முத்துராமலிங்கம் துவங்கினார். நகரில் உள்ள 1-வது வார்டுமுதல் 6-வது வார்டு வரையில் உள்ள இடங்களில் வீடுவீடாகச் சென்ற வேட்பாளர் முத்துராமலிங்கம் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதேபோல் நேற்று மாலை திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவன்குளம், வையம்பட்டி, கப்பலூர், உச்சப்பட்டி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில்  சுற்றுப்பயணம் செய்த வேட்பாளர் முத்துராமலிங்கம் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  பிரச்சாரத்தின் போது கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவில் திரண்டுவந்துவேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆரத்தி எடுத்து ஆதரவு தருவதாக உறுதிஅளித்தனர். 

அ.தி.மு.கவேட்பாளரின் பிரச்சாரத்தின் போது மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், திருமங்கலம் நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன், தொகுதிசெயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றியச் செயலாளர் செளடார்பட்டி பாண்டியன், நகர் கழக துணை செயலாளர் ராஜாமணி, தே.மு.தி.க.ஒன்றிய செயலாளர் ஜெயராமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பட்டதாரிகள் அணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், மார்க்ஸிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, புதியதமிழகம், சமத்துவமக்கள் கட்சி,  மற்றும் அ.தி.மு.க. நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணியினர் தொண்டர்கள் உடன் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்