முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.700 கோடி செலவில் சந்திரனை சுற்றி பார்க்கலாம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன். 22 - இந்த பூமியின் பல்வேறு கண்டங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு போரடித்துப் போய் கிடக்கும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி... சர்வதேவ விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்று வரும் காலம் தொடங்கிவிட்டது. லண்டனைச் சேர்ந்த எக்ஸ்காலிபர் அல்மாஸ் என்ற நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்தைத் தாண்டி சந்திரனுக்கும் டூர் போய்வர ஒரு பிளானை ரெடி செய்திருக்கிறது.

வரும் 2015-ம் ஆண்டு முதல் சந்திரனுக்கான டூர் தொடங்குகிறது. இதற்கான செலவு ரொம்ப அதிகமில்லை. வெறும் ரூ. 700 கோடிதானாம்!!

இதற்காக ரஷியாவிடம் இருந்து 6 சிறப்பு விண்கலங்கள் கூட வாங்கப்பட்டுவிட்டன. இதில் ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்கின்றனர். பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் வகையிலான இத்திட்டம் தொடர்பாக லண்டனில் செயல்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்