முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் புதிய பிரதமராக மக்தூம் சகாபுத்தீன் பரிந்துரை?

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 22 - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி அப்பதவிக்கே தகுயில்லாதவர் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு கடநத் ஏப்ரல் மாதம் 26ம் தேதி வந்தது. அந்த நாளில் இருந்து அவர் பிரதமராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று தெரிவித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், இது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கிலானியின் பிரதமர் பதவி பறிபோகிறது. இந்நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஆசிப் அலி சர்தாரியின் தலைமையில் இன்று அதிகாலை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீனை அடுத்த பிரதமராக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பிரதமரை தேர்வு செய்ய வசதியாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

புதிய பிரதமர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிலானியின் பதவியை பறிக்கக் கூறிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்கள் சர்தாரியை அறிவுறுத்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கிலானி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இறுதியில் பதவி பறிபோயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago