முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருமேனியா நாட்டு முன்னாள் பிரதமர் தற்கொலை முயற்சி

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

புகாரெஸ்ட்,ஜூன்.22 - ருமேனியா நாட்டு முன்னாள் பிரதமர் அட்ரியன் நாஸ்டேசே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்றும் ரஷ்யாவின் தீவிர ஆதரவு நாடுகளில் ஒன்றுமான ருமேனியா நாட்டு பிரதமராக இருந்தவர் அட்ரியன் நாஸ்டேசே. இவர், பிரதமராக இருந்தபோது பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு அவருக்கு கோர்ட்டு இரண்டு ஆண்டுகள் கடும் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. நாட்டின் சுப்ரீம்கோர்ட்டு இந்த தீர்ப்பை வழங்கிய ஒரு சில மணி நேரத்தில் அட்ரியன், துப்பாக்கியை எடுத்து தனது கழுத்தில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றார். குண்டு அவரது கழுத்தில் சிக்கியுள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் அவர் புகாரெஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு டாக்டர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அவரது கழுத்தில் இருந்து துப்பாக்கி குண்டை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் குண்டு எப்போது எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்