முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு பணிகளை கொடுக்க அமெரிக்காவின் பெரியவங்கி முடிவு

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன்- 25 - இந்தியாவுக்கு பணிகளை அளிக்க அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய வங்கி திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதனால் அமெரிக்க அரசியல் களம்  இப்போதே சூடு பிடித்துள்ளது. மேலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் பணிகளை கொடுக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு  நிலையில் அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய வங்கி தனது பணிகளை அவுட்சோர்சிங் முறையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது. சொத்து மதிப்பில் நான்காவது இடத்தை பிடித்துள்ள வெல்ஸ் பார்கோ என்ற இந்த வங்கி சிக்கன நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதனால் தனது வங்கி பணிகளை அவுட்சோர்சிங் முறையில் வெளிநாடுகளுக்கு அளிக்க திட்டமிட்டு வருகிறது.இந்த வங்கியின் பெண் செய்தி தொடர்பாளர் பிரிட்ஜெட் பிராக்ஸ்டன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் - எங்களது வங்கியின் சேவையை அதிகரிக்கும் வகையிலும்  லாபத்தை பெருக்கும் வகையிலும் திட்டங்களை தீட்டி வருகிறோம். எங்கே வளர்ச்சியை காண்பது, நீண்ட கால அடிப்படையில் எங்களது ஆதாரங்களை எங்கே இடமாற்றம் செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார். பொருளாதார ரீதியாக எந்த சந்தை எங்களுக்கு ஏற்றது என்பது குறித்துஆய்வு செய்து வருகிறோம். இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சர்வதேச சந்தைகள் மற்றும் உள்நாட்டு சந்தைகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் எத்தனை பணிகள் அளிக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அந்த செய்தி தொடர்பாளர் எந்தெந்த துறைகளில் என்னென்ன பணிகள் என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார். இந்த வங்கிக்கு ஏற்கனவே இந்தியாவில் ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.  இவற்றில் சுமார் 3,000 பேர் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்