முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ச்சுகல் - ஸ்பெயின் அணிகள் முதல் அரை இறுதியில் மோதல்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

வார்ஷா, ஜூன். - 25  - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியில் முதல் அரை இறுதிச் சுற்றில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிக ள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.  ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தி வருகின்ற  ன. கடந்த 2 வார காலத்திற்கும் மேலா  க நடந்து வரும் இந்தப் போட்டி விறு விறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.  இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி நாடுகள் களத்தில் குதித்து உள்ளன. இந்தப் போட்டி தற்போது அரை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.  யூரோ கோப்பை போட்டியில் பங்கே ற்று வரும் முன்னணி நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் மற்றும் முன்ன ணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெ ளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டி கடந்த 8-ம்தேதி துவங்கியது. முத லில் லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் 8 அணிகள் அதிகம் புள்ளிகல் பெற்று கா ல் இறுதிக்குள் நுழைந்தன.  முன்னதாக நடைபெற்ற முதல் கால் இறுதியில் போர்ச்சுகல் மற்றும் செக். குடியரசு அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த 2- வது கா ல் இறுதியில் ஜெர்மனி மற்றும் கிரீஸ் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அபாரமாக ஆடி, வெற்றி பெற்றது.
ஜெர்மனி இந்த ஆட்டத்தில் 4- 2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜெர்மனி தரப்பில் கேப்டனும், கிரீஸ் சார்பில் சாம்ராசும் முதல் கோலை அடித்தனர்.
அடுத்து நடந்த 3 -வது கால் இறுதியில் பலம் பொருந்திய அணிகளான ஸ்பெ யின் மற்றும் பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்காக போட்டியிட்டன.
இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் சிறப்பாக ஆடி 2- 0 என்ற கோல் கணக் கில் பிரான்சை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ   ட்டியின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் வரும் 27- ம் தேதி துவங்குகிறது. முதல் அரை இறுதியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.
ஸ்பெயின் அணி நடப்பு சாம்பியன் அணியாகும். எனவே அந்த அணி முழு வீச்சுடன் களம் இறங்குகிறது. அதே நே ரம் போர்ச்சுகல் அணி கால் இறுதியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்தப் போட்டியை சந்திக்கிறது.
எனவே இந்த அரை இறுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அரை இறுதியில் கடும் சவா லை சந்திக்க தங்களது வீரர்கள் ஆயத்த மாக உள்ளனர் என்று ஏற்கனவே போ ர்ச்சுகல் வீரர் ரொனால்டோ தெரிவித்து இருந்தார்.
--------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்