முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டி: ஜிம்பாப்வே கோப்பையை கைப்பற்றி சாதனை

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஜூன். 26 - ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 20-க்கு 20 முத்தரப்பு தொடர் இறுதிப் போட்டியி ல் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் வித் தியாசத்தல் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 3 -வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக நடந்த லீக் கில் ஜிம்பாப்வேயிடம் தோற்றது. பின் பு வங்கதேச அணியிடம் தோற்றது. தற் போது 3- வது முறையாக ஜிம்பாப்வே யிடம் தோற்று உள்ளது. 

இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணி தரப்பில், மசகட்ஜா மற்றும் கேப் டன் டெய்லர் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம்அடித்து அணியை வெ ற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப் பு டி - 20 தொடரில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகி ய 3 நாடுகள் கோப்பைக்காக களம் இறங்கின. 

முன்னதாக நடந்த லீக் ஆட்டங்களில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக் கா அணிகள் அதிகம் புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. வங்க தேசம் குறைந்த புள்ளிகள் பெற்று வெ ளியேறியது. 

இதன் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப் பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. 

இறுதிச் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்னை எடுத் தது. அந்த அணி தரப்பில் ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டுபிளெசிஸ் அதிகபட்சமாக, 57 பந்தில் 66 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். மார்கெல் 23 பந்தில் 34 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, இங்க்ராம் 19 ரன்னையும், பர்னெல் 12 ரன்னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில், ஜார்விஸ் 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, போபு, உத்செயா, கிரிமர் மற்றும் வாலர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி 147 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை தென் ஆப்பிரிக்கா அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்னை எடுத்தது. இதனால் ஜிம்பாப் வே அணி இந்த இறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெ ற்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 

ஜிம்பாப்வே அணி தரப்பில், மசகட்ஜா 50 பந்தில் 58 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். கேப்டன் டெய்லர் 41 பந்தில் 59 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர சிபா  ண்டா 15 பந்தில் 23 ரன்னை எடுத்தார். 

தென் ஆப்பிரிக்கா சார்பில், மோரிஸ் 24 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு த்தார். சாட்சோபே, பர்னெல், பீட்டர் சன், டு பிளெசிஸ் ஆகியோருக்கு விக் கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டெய்லர் தே ர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்