முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். வெ.மந்திரிகள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.27 - இந்தியா-பாகிஸ்தான் இடையே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவை சீர்படுத்த மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்தில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருந்தது. பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இஸ்லாமாபாத்திற்கு செல்லவிருந்தார். 

இந்தநிலையில் பேச்சுவார்த்தை திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இதற்குக்காரணம் இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளதுதான். வருகின்ற ஜூலை 17-ம்தேதி பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு இந்தியா மறுத்துவிட்டது. அன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால் இருதரப்பினர்களுக்கும் ஏற்றவாறு தேதியை முடிவு செய்ய அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. அநேகமாக வரும் ஆகஸ்ட் மாதம் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்