முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத்தை ஒடுக்க இந்தியாவுக்கு ஒத்துழைப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.27 - தீவிரவாதத்தை ஒடுக்க போராடி வரும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 156 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அப்சல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மேலும் பல தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டான். இந்த நிலையில் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபு ஜிந்தால் என்ற தீவிரவாதியை இந்திய போலீசார் தேடி வந்தனர். ஜிந்தால் இந்தியாவை சேர்ந்தவன். இவன் எப்படியோ தப்பியோடி சவூதி அரேபியாவுக்கு ஓடிவிட்டான். இதுகுறித்து தகவல் கிடைத்தவும் சவூதி அரேபியா அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பேரில் ஜிந்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். புதுடெல்லி விமான நிலையத்தில் வந்திருங்கிய ஜிந்தாலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது ஜிந்தாலுக்கும் கசாப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஜிந்தால் குறித்து மேலும் பல தகவல்களை திரட்ட விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தீவிரவாதம் எல்லோருக்கும் கவலையை தரக்கூடிய ஒரு பொதுவான விஷயமாகும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்