முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய முயற்சி: குடும்பத்தினர்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

அமிர்தசரஸ்,ஜூன்.28 - பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வதற்காக தொடர்ந்து முயற்சி செய்வோம். முயற்சியை கைவிட மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் உறுதியுடன் கூறினர். லாகூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர் சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானையொட்டி எல்லைப்பகுதியில் சரப்ஜித் சிங் இருந்தபோது அவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து வேண்டுமென்றே லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை பாரபட்சமாக விசாரித்த லாகூர் கோர்ட்டு சரப்ஜித் சிங்கிற்கு லாகூர் கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்தநிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை பாகிஸ்தான் அதிபர் ஆயுள் தண்டனையாக குறைத்தார். சரப்ஜித் சிங் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் சரப்ஜித் விடுதலை செய்யப்படுவது உறுதியாக இருந்தது. ஆனால் மற்றொரு இந்தியர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள சரப்ஜித் சிங் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். சரப்ஜித் சிங்கை விடுதலை செய்யாதது ஒரு கொடுமையான நக்கலாகும். இருந்தபோதிலும் சரப்ஜித் சிங் விடுதலையாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவரது குடும்பத்தினர் உறுதிபடக் கூறினர். சரப்ஜித் எப்படியும் விடுதலையாகிவிடுவார் என்ற சந்தோஷத்தில் அவரது சொந்த கிராமமான பிஹிவிந்த் கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி கொண்டாட தயாராக இருந்தனர். பாகிஸ்தானின் இந்த திடீர் பல்டியால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்