முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: மார்கோஸ் முன்னேற்றம்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 28 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான நிக்கோலஸ், டேவிட் பெ ர்ரர் மற்றும் மார்கோஸ் ஆகியோர் வெ ற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த வருடத்தின் 3- வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் இங்கிலாந்தின் தலைநக ரான லண்டன் அருகே கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கல் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதி த்து உள்ளனர். இந்தப் போட்டி தற் போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் ஸ்பெயின் முன்னணி வீரரான நிக் கோலஸ் அல் மெக்ரோவும், பெல்ஜி யம் வீரர் ரோச்சசும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் அபார மாக ஆடி, 3 -6, 7 - 6(7),6- 2, 6- 4 என்ற செட் ணக்கில் ரோச்சசை வீழ்த் தி னார். 

மற்ற ஆட்டங்களில் சைப்ரஸ் வீரர் மா ர்கோஸ் பக்தாதிஸ் 6 -2, 6 - 4, 6- 4 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் வில் ஆல்பெல்ட்டை வென்றார். ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர்  ஜெர்மனி வீரர் டிஸ்டினையும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பிரேசில் வீரர் பெல் லுக்சியை வென்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றி ல், ரஷ்ய வீராங்கனைகள் அனஸ்டாசி யா, வெரா ஜெனரோவா, இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா ஷியா வோன் ஆகியோர் வெற்ற பெற்று அடு த்த சுற்றுக்கு தாவினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்