முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்: இங்கிலாந்து 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 1 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடை பெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், மார்கன் மற்றும் டிராட் ஆகியோர் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக கே ப்டன் குக், இயான் பெல், கீஸ்வெட்ட ர் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, ஆண்டர்ச ன், பின், பிரஸ்னன் மற்றும் பிராட் ஆகி யோர் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெ ட் எடுத்து அணியை வெற்றிப் பாதைக் கு அழைத்துச் சென்றனர். 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப் டன் குக் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போ  ட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற் கு 272 ரன்னை எடுத்தது. அந்த அணி தர ப்பில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

மார்கன் அதிகபட்சமாக, 63 பந்தில் 89 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 98 நிமிடம் கள த்தில் இருந்த அவர் மொத்தம் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சரை அடித்தார். 

டிராட் 70 பந்தில் 54 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, இயான் பெல் 41 ரன்னையும், கேப்டன் குக் 40 ரன்னையும், கீஸ்வெட்டர் 25 ரன் னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், பிரட்லீ 57 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடு த்தார். தவிர, மெக்கே, கும்மின்ஸ், டொகெர்டி மற்றும் வாட்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 273 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற் கு 257 ரன்னை எடுத்தது. 

இதனால் இங்கிலாந்து அணி இந்த முத ல் போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போ  ட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், மைக் கேல் கிளார்க் 61 ரன்னையும், வார்னர் 56 ரன்னையும், பெய்லி மற்றும் பிரட்லீ தலா 29 ரன்னையும், வாடே 27 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், ஆண்டர் சன் 56 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பின், பிரஸ்னன் மற் றும் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மார்கன் தேர்வு செய்யப்ப ட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago