முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: பயஸ் - வெஸ்னினா முன்னேற்றம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஜூலை. 6 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் மற்றும் வெஸ்னினா ஜோடி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் உல க நம்பர் -1 வீரரான ஜோகோவிக், நம் பர் - 3 வீரரான ரோஜர் பெடரர், இங்கி லாந்து வீரர் ஆன்டி முர்ரே மற்றும் சாங் கோ ஆகியோர் கால் இறுதியில் வெற் றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்த வருடத்தின் 3 - வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் அருகே கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் சாபிம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித் து உள்ளனர். இந்தப் போட்டி தற்போ து அரை இறுதிக் கட்டத்தை அடைந்து ள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற் சாகப்படுத்தி வருகின்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவின் 3-வது சுற் று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் லியாண்டர் பயஸ் மற்றும் எலீனா வெ ஸ்னினா(ரஷ்யா) ஜோடியும், ஆஸ்திரி யா மற்றும் ஜெர்மனி இணையும் சந்தி த்தன.
இதில் இந்திய மற்றும் ரஷ்ய ஜோடி அபாரமாக ஆடி, 6 - 3, 6 - 3 என்ற செட் கணக்கில்  ஆஷ்லே பிஷர் மற்றும் மோனா பார்த்தல் இணையை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ரோகன் பொப ண்ணா மற்றும் சென்க் (சீனா) ஜோடி 6-0, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி யின் டேனியல் மற்றும் வின்சி இணை யை தோற்கடித்து கால் இறுதிக்கு முன் னேறியது.
மகளிருக்கான இரட்டையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா மற்றும் பெத்தானி மேடக் இணை யை வீழ்த்தியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் கால் இறு திச் சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான ஜோகோவிக்கும், ஜெர்மனி வீரர் புளோரியன் மேயரும் மோதினர். இதில்  செர்பிய வீரர் 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரரும், ரஷ்ய முன் னணி வீரரான மிகைல் யூஸ்னியும் மோதினர். இதில் பெடரர் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில்  வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-7, 7-6, 6-4, 7-6 என்ற செ ட் கணக்கில் டேவிட் பெர்ரரையும், பிரான்ஸ் வீரர் சோங்கோ 7-6, 4-6,7-6 என்ற செட் கணக்கில் ஸ்கைபரையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரை இறு திச் சுற்றில் ஜோகோவிக்கும், ரோஜர் பெடரரும் மோதுகின்றனர். 2-வது அரை இறுதியில், ஆன்டி முர்ரேவும், சோங்கோவும் மோதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்