முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு வீரர்களுக்கு இடம்: முதல்வருக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களை 500 ஆக உயர்த்தி அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய சமத்து மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: உலக அளவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், எண்ணிக்கை இருக்கும் அளவிற்கு விளையாட்டுத் துறையில் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் மிகக்குறைவாகவே சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறையில் ஆர்வமும், சாதனைகள் படைக்க ஊக்கமும் ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

அந்த வகையில் தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதோடு, முதலமைச்சர் ஜெயலலிதா மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக, பொறியியல் கல்லூரிகளில் 500 இடங்கள் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒதுக்கித்தர உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கு வதன் மூலம், ஒருபுறம் அவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயம் அதிகரிக்கும். மறுபுறம் பல்வேறு விளையாட்டுக்களை ஆதரித்து ஊக்குவிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் முதலமைச்சரின் அறிவிப்பு, வருங்காலத்தில் விளையாட்டுத் துறையில் இந்தியா புகழ் ஏணியில் ஏறுவதற்கு தமிழகத்தின் பங்கு பெரும் அளவில் இருப்பதை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.

இந்த நோக்கில் தொலைநோக்கு சிந்தனையுடன் விளையாட்டுத் துறையில் நம் நாடும் குறிப்பாக தமிழகமும் சாதனை படைக்கும் விதமாக பொறியியல் கல்லூரிகளில் 500 இடங்களை ஒதுக்கி அறிவித்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், மாணவர்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்