முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முதலீட்டில் தமிழகம் அபார சாதனை: அசோசம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - தமிழகம் கடந்த ஓராண்டில் ரூ.9.2 லட்சம் கோடி தொழில் முதலீடை ஈர்த்து சாதனை படைத்துள்ளது என்று அசோசம் என்ற  வர்த்தக உயர் அமைப்பு பாராட்டி உள்ளது. பொருளாதார மந்தநிலையிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை தமிழகம் பெற்று தொழில் முதலீட்டிற்கான முக்கிய கேந்திரமாக தமிழகம் விளங்குகிறது என்றும் அந்த அமைப்பு பாராட்டி இருக்கிறது.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (அசோசம்) சார்பில் தொழில் முதலீடு குறித்த ஆய்வு அறிக்கையை அதன் தலைவர் ராஜ்குமார் தூத், தென் மண்டல தலைவர் ரவி சனாரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் டி.எஸ்.ராபர்ட் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். தமிழகத்தில் அபரித வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.  அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் தொழில் முதலீட்டில் 15 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் வரை 1637 திட்டங்களில் ரூ.9.2 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளது.  இதில் அதிகபட்சமாக எரிசக்தி துறைக்கு ரூ.3.5 லட்சம் கோடி கிடைத்துள்ளது.  இது மொத்த முதலீட்டில் 38.5 சதவீதம் ஆகும்.

சேவைகள் தொடர்பான முதலீட்டில் 32.3 சதவீதமும், உற்பத்தி பிரிவில் 17.5 சதவீதமும், ரியல் எஸ்டேட் பிரிவில் 9.6 சதவீதமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் மொத்தம் ரூ.139.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.9.2 லட்சம் கோடியை தமிழகம் ஈர்த்து இருப்பது பாராட்டத்தக்கது.  அரசு மற்றும் தனியார் துறையினர் இந்தியாவில் செய்த முதலீட்டில் தமிழகம் 6.5 சதவீதத்தை பெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு ஆதாரம் மூலம் செய்யப்பட்ட முதலீட்டில் 8.5 சதவீதம் தமிழகம் பெற்றுள்ளது. தனியார் துறை மூலமான முதலீட்டில் 5.2 சதவீதத்தை தமிழகம் ஈர்த்து இருக்கிறது.  பொருளாதார நிலை மந்தமாக இருந்த போதிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலத்தனத்தை ஈர்ப்பதில் தமிழகம் முக்கிய கேந்தி ரமாக விளங்குகிறது.  ஆண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உள்ளது. தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி ரூ.219 லட்சம் கோடியிலிருந்து ரூ.428 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில் மிக அதிக அளவில் முதலீட்டை பெற்றுள்ளது. அதேபோல சேவை துறையில் 18 சதவீத பங்கு பெற்றுள்ள தமிழகத்தில் வர்த்தகம் மற்றும் ஓட்டல்கள் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்