முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகுனி-யில் ராகுலை விமர்சிக்கவில்லை: கார்த்தி

திங்கட்கிழமை, 2 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை. - 2 - சகுனி திரைப்படத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சிக்கவில்லை என அத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.  மதுரையில் சகுனி திரையிட்டுள்ள தங்க ரீகல் திரையரங்கில் மாலைக் காட்சியின் போது திரையின் முன்பு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகர் கார்த்தி, பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,  மதுரை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் சகுனி திரைப்படம் இருப்பதாக கூறுகின்றனர். சகுனி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக திரையரங்குகளுக்கு நேரடியாக செல்கிறேன். இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த படம் அரசியல் கலந்த காமெடி படமாக அமைந்துள்ளது. இதில் தொடர்ந்து புதுப்புது கதாபாத்திரங்களில் வந்து செல்வது சிறப்பு அம்சமாக கூறலாம். படத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக கூறுவது தவறு. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.  பருத்தி வீரன் படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அது பெரிய வெற்றியை பெற்றது. வெளிநாடுகளிலும் எனக்கு மரியாதையை பெற்றுத் தந்தது. என்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் விக்ரம் கூறவில்லை. என் மீது அதிக நம்பிக்கை உள்ளதாகவே கூறியிருந்தார். அவரது பாராட்டு எனக்கு கிடைத்த கவுரவம். எனது அண்ணன் சூரியாவுடன் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தால் சேர்ந்து நடிப்போம். எனது அடுத்த படம் அலெக்ஸ் பாண்டியன். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றார். பேட்டியின் போது அப்படத்தின் இயக்குனர் சங்கர்தேவன், தயாரிப்பாளர்கள் பிரபு ஞானவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago