முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை - பாகிஸ்தான் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் டிரா

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 6- இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்று வந்த 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இலங்கை 1- 0 என்ற கண க்கில் முன்னிலையில் உள்ளது.  இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. இதனால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனால் மழை இடை இடையே பெய்ததால் ஆட்டம் இறுதி யில் டிராவானது. 

பாகிஸ்தான் அணி தரப்பில் இந்தப் போட்டியில் மொகமது ஹபீஸ் மற்று ம் அசார் ஆலி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்தனர். ஹபீ ஸ் இரட்டை சதவாய்ப்பை நழுவவிட்டார். 

பின்பு பெளலிங்கின் போது, ஜூனைத் கான் நன்கு பந்து வீசி 5 விக்கெட் வீழ்த் தினார். அவருக்கு ஆதரவாக அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் மற்றும் சீமா ஆகியோர் பந்து வீசினர். 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக ளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் உள்ள சிங்களர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 30-ம் தேதி துவங்கி 4-ம் தே தி முடிவடைந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகி ஸ்தான் அணி 147 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 551 ரன்னைக் குவித்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. இதில் 2 வீரர்கள் சதம் அடித்தனர். 

துவக்க வீரர் மொகமது ஹபீஸ் 331 பந் தில் 196 ரன்னையும், அசார் அலி 295 பந்தில் 157 ரன்னையும், எடுத்தனர். தவிர, டெளபீக் உமர் 74 பந்தில் 65 ரன்னையு ம், மிஸ்பா உல் ஹக் 80 பந்தில் 66 ரன் னையும், யூனிஸ் கான் 32 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில், 124.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 391 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், 2 வீரர்கள் சதம் அடித்தனர். 

சங்கக்கரா 351 பந்தில் 192 ரன்னை எடுத் தார். தில்ஷான் 195 பந்தில் 121 ரன்னை எடுத்தார். தவிர மேத்யூஸ் 101 பந்தில் 47 ரன்னையும், ஹெராத் 10 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு பாகிஸ்தான் அணி 2-வது இன்னி ங்சில் 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற் கு 100 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெ க்ளெர் செய்தது. இதில் டெளபீக் உமர் 42 ரன்னையும், அப்துர் ரெஹ்மான் 36 ரன்னையும், மொகமது ஹபீக் 21 ரன் னையும் எடுத்தனர். 

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 261 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது. ஆனால்அடுத்து களம் இறங் கிய அந்த அணி 22 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்னை எடுத்து இருந் தது. 

இதனால் 5- வது நாளன்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் இலங்கை அணி 1- 0 என்ற கணக்கி ல் முன்னிலை பெற்று உள்ளது. 

இலங்கை அணி தரப்பில், பரணவிதா  னா 32 ரன்னையும், தில்ஷான் 28 ரன் னையும், சங்கக்கரா 24 ரன்னையும், எடு த்து இருந்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜூனைத் கான் தேர் வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்