முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு பிரிவு மாணவர் கவுன்சலிங் தொடங்கியது

திங்கட்கிழமை, 9 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.10 - இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நேற்று  தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதை 500 இடமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனை தொடர்ந்து, விளையாட்டு வீரர்களுக்கு மறு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த சில நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. அதன்படி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நேற்று  தொடங்கியது.

இந்த ஒதுக்கீட்டில் முதல் இடம் பிடித்த நித்திய லட்சுமி என்ற மாணவிக்கு சேர்க்கைக்கான உத்தரவை தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ரமேஷ் சந்த் மீனா வழங்கி கலந்தாய்வை தொடங்கி வைத்தார். இதில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியதாவது:

விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் 3,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,876 பேர் அழைக்கப்பட்டு, 1596 பேர் கலந்து கொண்டனர். இதில், 990 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் கவுன்சலிங்கில் 516 பேர் கலந்து கொள்ளுகின்றனர். நாளை 474 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த கவுன்சலிங்கில் இடம் கிடைக்காதவர்கள் பொது கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2ம் கட்ட கவுன்சலிங்கிலும் கலந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு புதிதாக 12 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 13ம் தேதிக்குள் முடிவு தெரிந்துவிடும். இவ்வாறு ரமேஷ் சந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்