முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.10 - சமூகநலத்துறைத் திட்டங்கள் குறித்து சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் அனைத்து மாவட்ட சமூக அலுவலர்கள் மற்றும் தொழிற் கூட்டுறவு அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் 9.7.12 அன்று காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி செயற்படுத்தப்பட்டுவரும் பள்ளி மாணவ /மாணவியருக்கு நான்கு இணை இலவச சீருடைகள் தைத்து வழங்கும் திட்டம், திருமண உதவித்திட்டங்களின் கீழ் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்ல மாணவியருக்கான உயர்கல்வி திட்டம், திருநங்கைகளின் சுய உதவிக்குழுக்களுக்கு வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான கடனுதவி வழங்கும் திட்டம், திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரும் திட்டம், இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் அசோக் டோங்கரே, அரசு முதன்மைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, முனைவர் பூ.முத்துவீரன், சமூகநலத்துறை இயக்குனர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்