முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒரு நாள்: நியூசிலாந்து 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

செயின்ட் கிட்ஸ், ஜூலை. 13 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதி ராக நடைபெற்ற 3 -வது ஒரு நாள் கிரி க்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற து. இதன் மூலம் இந்தத் தொடர் 2-1 என்ற கணக்கிற்கு சென்று உள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில், நிக்கோல் மற்றும் எல். மெக் குல்லம் இருவரும் அபாரமாக பேட்டி ங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்க ளுக்கு பக்கபலமாக, கீப்பர் வாட்லிங், பிளைன், செளதீ ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, டி.ஏ. போல்ட், ஜேக்கப் ஓரம் மற்றும் எல்.     மெக்குல்லம் ஆகியோர் தலா 2 விக்கெ ட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக,       செளதீ பந்து வீசினார். 

மே.இ.தீவு மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நா ள் போட்டி செயின்ட் கிட்ஸ் தீவில் பெ சட்டரே நகரில் உள்ள வார்னர் பார்க்கி ல் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய நியூசிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

துவக்க வீரர் நிக்கோல் 69 பந்தில் 59 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 3 சிக்சர் அடக்கம். என்.எல். மெக் குல்லம் 70 பந்தில் 50 ரன்னை எடுத்தா ர். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கீப்பர் வாட்லிங் 47 பந்தில் 40 ரன்னையும், பிளைன் 28 ரன் னையும், செளதீ 17 ரன்னையும், எடுத்த னர். 

மே.இ.தீவு அணி தரப்பில், வேகப் பந் து வீச்சாளர் ரஸ்செல் 57 ரன்னைக் கொ டுத்து 4 விக்கெட் எடுத்தார். நரீன் 2 விக் கெட் எடுத்தார். தவிர, சம்மி, சாமுவே ல்ஸ் மற்றும் ஜே. பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி 150 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 161 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்த 3-வது போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2- 1 என்ற நிலையில் உள்ளது. 

மே.இ.தீவு அணி தரப்பில், 9- வது வீர ராக இறங்கிய ரஸ்செல் அதிகபட்சமா க, 24 பந்தில் 40 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில்  3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். மற்ற வீரர்கள் யாரும் கால் சதத்தை தாண்டவில்லை. டி.ஸ்மித் 19 ரன்னையும், பொல்லார்டு 16 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், ஜேக்கப் ஓரம் 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். எல். மெக்குல்லம் 40 ரனனைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். டி.ஏ. போல்ட் 45 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, செளதீ 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக நிக்கோல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago