முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 15 - லண்டனில் 3 வது முறையாக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.  லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த 1908, 1948 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. இந்த முறை 3வது முறையாக நடத்துவதன் மூலம், அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பட்டியலின் முதலிடத்தை லண்டன் மற்றும் ஏதேன்ஸ் நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன.

இந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 1912 ஸ்டாக்ஹால்ம் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி முடிவடைந்தது. கடந்த 1948 லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 29ம் தேதி துவங்கியது.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் அதிக வயது உடையவர் ஜப்பானை சேர்ந்த குதிரை சவாரி வீரர் ஹிரோஷி ஹோக்ட்சூ. இவருக்கு 70 வயது.

கடந்த 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 தங்கம் உட்பட மொத்தம் 23 பதக்கங்களை வென்றது. இதன்மூலம் பதக்க பட்டியலில் 12வது இடத்தை பெற்றது. இந்த நிலையில் 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி பெற்ற மொத்த பதக்கங்களில் இருந்து தங்கப் பதக்கத்தை கழித்தால், 20 என்ற எண் கிடைக்கிறது. இதனுடன் இங்கிலாந்து பதக்க பட்டியலில் பெற்ற இடத்தையும் சேர்த்தால், 2012 என்ற எண் கிடைக்கிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சுமார் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் 300 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் 147 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்