முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி மே.இ.தீவு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 18 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

செயின்ட் கிட்ஸ், ஜூலை. - 18 - நியூசிலாந்து அணிக்கு எதிராக செயின் ட் கிட்ஸ் தீவில் நடைபெற்ற 5 -வது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய த் தீவுகள் அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், ஜே. பிராவோ, ரஸ்செல் இருவரும் நன்கு பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு முன்னி லை பெற்றுத் தந்தனர். சாமுவேல்ஸ், சார்லஸ் மற்றும் தாமஸ் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது இளம் சுழற் பந்து வீச்சாளரான சுனில் நரீன் அபாரமாக பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டைச் சாய்த்தார். அவருக்கு பக்கப லமாக, பெஸ்ட், சாமுவேல்ஸ் மற்றும் ஜே. பிராவோ  ஆகியோர் பந்து வீசினர்.  மே.இ.தீவு மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செயின்ட் கிட்ஸ் தீவில் பெசட்டரே நகரில் உள்ள வார்னர் பார்க்கில் நடைபெற்றது. முன்னதாக இதில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய மே.இ.தீவு அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 241 ரன்ன்னை எடுத்தது. இதில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். 

ரஸ்செல் 40 பந்தில் 59 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக் சர் அடக்கம். ஜே. பிராவோ 93 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்ட ரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, சா முவேல்ஸ் 59 பந்தில் 43 ரன்னையும், சார்லஸ் 15 ரன்னையும், கீப்பர் தாமஸ் 20 ரன்னையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில், மில்ஸ் 40 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். செளதீ 37 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, எல்லிஸ் 2 விக்கெட்டையும், வில்லியம்சன் 1 விக் கெட்டையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி 242 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 5 -வது போட்டியில் மே.இ.தீவு அணி 20 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை 4 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. 

நியூசிலாந்து அணி தரப்பில், வில்லியம் சன் 84 பந்தில் 69 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, குப்டில் மற்றும் பி. மெக்குல்லம் தலா 33 ரன்னையும், டெய்லர் 28 ரன்னையும், எல்லிஸ் 28 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில் நரீன் 27 ரன் னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, பெஸ்ட் மற்றும் ஜே. பிராரோ தலா 2 விக்கெட்டையும், சாமுவேல்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டி மற்றும் தொடர் நாயகனாக சுனில் நரீன் தேர்வு செய்யப்பட்டார். 

----------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்