முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் ஒலிம்பிக் வெற்றியில் சர்தாராவும், சந்தீப்பும் முக்கிய பங்கு வகிப்பார்கள்

புதன்கிழமை, 18 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை. - 18 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தி ய ஹாக்கி அணியின் வெற்றியில் சர்தா ராவும், சந்தீப் சிங்கும், முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பயிற்சியாளர் மை க்கேல் நாப்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். லண்டன் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டி யில் இந்திய அணி இடம் பெற்று உள்ள பிரிவு மிகவும் கடினமானதாகும். இதில் பலமிக்க பெரிய அணிகள் உள்ளன.  எனவே இந்திய அணி ஒலிம்பிக்கில் கடும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. இருந்த போதிலும், இந்திய அணி வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயிற்சியாளர் உள்ளார். இந்திய ஹாக்கி அணி தற்போது ஸ்பெ யின் சென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டி க்காக அங்கு ஸ்பெயின் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.  ஸ்பெயின் நாட்டில் கண்டபிரியா மா காணத்தின் தலைநகரான லா அல்பெ ரிசியா நகரில் நிருபர்களைச் சந்தித்த போது, அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் நாப்ஸ் மேற்கண்டவாறு கூறினார்.  மேலும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்தி ய அணி இடம் பெற்று உள்ள பிரிவு கடி னமானதாகும். இதில் எந்த அணி வெ ற்றி பெறும், எந்த அணி தோற்கும் என் று உறுதியாகக் கூற முடியாது. நாம் முடிந்தவரை சிறப்பாக ஆடுவோம் என்றும் நாப்ஸ் தெரிவித்தார்.  ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இடம் பெற முயற்சிக்கும். இந் தப் போட்டியில் இந்திய அணி தவிர மற்றும் 11 அணிகள் கலந்து கொள்கின்றன என்றும் மைக்கேல் கூறினார்.  தற்போதைய நிலையில் உலகின் சிறந் த 2 அல்லது 3 வீரர்களில் சர்தாராவும் ஒருவர். அவர் சிறப்பாக ஆடும் பட்சத் தில் இந்திய அணி நல்ல நிலையை எட்டும். தவிர, சந்தீப் சிங் நல்ல முறையில் பெனால்டி கார்னர் கோல் அடித்தால் அதுவும் அணியின் வெற்றிக்கு உதவும் என்றும் நாப்ஸ் தெரிவித்தார்.
8 முறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்ட ம் வென்ற இந்திய அணி பெய்ஜிங் ஒலி ம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.  இந்த முறை லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு வழியாக தகுதி பெற்று விட்டது. ஆனால் இந்த முறை பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு  கடும் சவால் காத்திருக்கிறது.
இந்த பி பிரிவில், ஜெர்மனி, நெதர்லா ந்து, நியூசிலாந்து, கொரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய பலம் பொருந்திய அணிகள் இடம் பெற்று உள்ளன.  இந்திய அணி இழந்து போன தனது புகழை அடைய முன்னேறி வருகிறது என்றும், தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க இன்னும் சில காலம் ஆகும் என்று பயிற்சியாளர் நாப்ஸ் தெரிவிக்கிறார்.
ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணி நன்றாக ஆயத்தமாகி உள்ளது என்றும், இது தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இன்னும் சில பகுதிகளில் பலவீனத்தை நீக்க இந்திய அணி கடுமையாக பாடுப  ட வேண்டி உள்ளது என்றும் அவர் தெ ரிவித்தார்.  மேலும், பிரான்ஸ் பயணம் சிறந்த பயி ற்சி ஆட்டமாக அமைந்தது என்றும் ஸ்பெயின் சுற்றுப் பயணம் ஒலிம்பிக் கிற்கு தயாராக நல்ல உதவியாக இருந் தது என்றும் பயிற்சியாளர் நாப்ஸ் கூறி னார்.
-----------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago