முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அமிதாப் -நடிகை கரினாகபூருக்கு மதுரை ஐகோர்ட்கிளை நோட்டீஸ்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

மதுரை,ஜூலை.- 19 - ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆபாசநடனம் ஆடியது தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், கரினாகபூருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்தவர் வக்கீல் ஜெயக்குமார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகைகள் கரீனகபூர், பிரியங்கா சோப்ரா, நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான் உள்பட பலர் ஆபாச நடனம் ஆடினர். முகம் சுளிக்கும் வகையில் நடந்த இந்த நடனத்தை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தனர். இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டிஜிபி மற்றும் தென்மண்டல ஐஜி உள்பட பல போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர்ரமேஷ்குமார் ஆஜரானார். அரசு சார்பில் வக்கீல் செல்லப்பாண்டியன் ஆஜரானார். வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும் போது, ஐபிஎல் தொடக்க விழாவில் ஆபாசநடனம் ஆடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். வக்கீல் செல்லப்பாண்டியன் வாதிடும் போது கோர்ட் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு செயல்பட தயாராக உள்ளதாக கூறினார். அதன் பின்பு நீதிபதி செல்வம் உரிய பதில் அளிக்கும் படி போலீஸ் டிஜிபி, ஐஜி(பொது) போலீஸ் ஐஜி (தென்மண்டலம்) ஐபிஎல் தலைவர் ராஜேஷ்சுக்லா, நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரிமாகபூர், பிரியங்கா சோப்ரா உள்பட12 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வருகிற 31 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

---

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago