முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்திற்காக ஓட்டளிக்கக் கூடாது - இல. கணேசன்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.2 - பணத்திற்காக ஓட்டளிக்காமல் நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் பேசினார். தி.மு.க.வில் மட்டுமல்ல, காங்கிரசிலும் குடும்ப ஆட்சி தலைவிரித்தாடுகிறது. இந்திய அரசியல் நேரு குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு விட்டது. இந்த இரண்டு பெரிய ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவின் முடிவுகள், தீர்மானங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கியுள்ளது. இதனால் தேசத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க மின் உலைகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. இது அமெரிக்காவின் வற்புறுத்தலால் எடுக்கப்பட்ட முடிவாகும். இது அமைக்க அதிகம் செலவாகும். ஆபத்தானதும் கூட. இது தெரிந்தும் முயற்சி செய்கின்றனர். மொத்த மின் தேவையில் 3 சதவீதம் கூட இந்த அணுமின் உற்பத்தியால் பூர்த்தி செய்ய முடியாது. 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி திட்ட ஊழல் என இந்தியாவில் எங்கு திரும்பினாலும் ஊழல்தான் மலிந்து கிடக்கிறது. மத்திய அரசின் தவறான திட்டங்களால் ரூ 58 ஆயிரம் கோடி மதிப்பிலான தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன. நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபம், காங்கிரசின் முக்கிய புள்ளிகளுக்கு செல்கிறது. இந்தியாவில் ஊழல் பெருகி விட்டது. ஊழலை கண்காணிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளது. அதில் ஊழலற்ற அதிகாரியை நியமிக்க வேண்டும். அரசியலுக்கு வருபவர்கள் ஊழலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் ஊழலில் இருந்து தப்பிக்க அரசியலுக்கு வந்தவர் சோனியா. பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடக் கூடாது. நல்லவர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago