முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு இருதய ஆபரேஷன் நடந்தது

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

மும்பை,ஜூலை.- 19 - பிரபல இந்தி நடிகரும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவுக்கு இருதய ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 66 வயதாகும் நடிகர் சத்ருகன் சின்ஹா கடந்த 1969-ம் ஆண்டு முதன் முதலாக சாஜன் என்ற இந்தி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். அதிலிருந்து 200 இந்தி படங்களில் நடித்துள்ளார். அதைத்தவிர வங்கம் மற்றும் பஞ்சாப் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். காலிச்சரன், விஸ்வநாத், பிளாக்மெயில், ஷான் போன்ற படங்களில் சத்ருகன் சின்ஹாவின் வசனம் வாசகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர் நடிப்பதை குறைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் மும்பை நகரில் உள்ள கோரிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது இருதயத்திற்கு போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே இருதய அபரேஷன் செய்ய வேண்டும் என்று சின்ஹாவுக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறினர். இதனையொட்டி கடந்த திங்கள்கிழமை அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. அவர் நல்ல முறையில் இருக்கிறது. வேகமாக உடல்நலம் பெற்று வருகிறார். தமக்கு வாழ்த்து கூறியவர்களுக்கெல்லாம் நன்றியை சின்ஹா தெரிவித்துள்ளார் என்று டாக்டர் நாராயணன் தெரிவித்தார். இன்னும் ஒரு வார காலத்திற்கு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்