முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடிவேலுவுக்கு போட்டியாக களத்தில் குதித்த நடிகர் சிங்கமுத்து

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஏப்.2 - நடிகர் வடிவேலுவுக்கு போட்டியாக அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் செய்கிறார். நடிகர் விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட பகை இருந்தது. இதையடுத்து தி.மு.க.வுக்கு ஆதரவாக வடிவேலு தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். இந்த பிரச்சாரத்தில் விஜயகாந்தையும் அவரது கட்சியையும் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக தேர்தல் ஆணையம் சார்பில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வடிவேலுவுக்கு போட்டியாக சிரிப்பு நடிகர் சிங்கமுத்து அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார். இவர்கள் இருவரும் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்தவர்கள். ஆனால் கடந்த ஆண்டு நடந்த நிலப்பிரச்சனையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிங்கமுத்து மீது வடிவேலு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாருக்கு சிங்கமுத்து பதிலளித்தார். இதனால் இருவரும் எதிரும் புதிருமாக மாறினர். இந்த நிலையில் சிங்கமுத்து ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதன்பின்னர் கொளத்தூர் தொகுதியில் சிங்கமுத்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். ஆயிரம்விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்யும்போது, சிங்கமுத்து பேசியதாவது, விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு மேலும் துன்பப்பட முடியாது. எனவேதான் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால்தான் இந்த மாற்றத்தை கொண்டுவர முடியும். தி.மு.க.வினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்பிப்பதுதான் அவர்களது கவலை. புதிதாக ஒரு நடிகர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். அவரைப் பற்றி இந்த சிங்கம் பேசுவதே அசிங்கம். நிதானம் இல்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்ப நிதானமாக இருந்தாய்? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா? கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். சில நேரம் அந்த வேட்டியும் இல்லாமல் நின்றாய். அந்த வேட்டியை துவைக்க சோப்பை நாலாக வெட்டி அந்த நாலு பகுதியையும் நூறு நாட்களுக்கு வைத்துக்கொள்வாய். விஜயகாந்தை விமர்சிக்க உனக்கு தகுதியில்லை. 

முன்னாள் அமைச்சராக இருந்த ஒரு நல்ல வேட்பாளரை அ.தி.மு.க. தந்துள்ளது எனது பா.வளர்மதியை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago