முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் லட்சுமி மரணம்: ஆர்.சரத்குமார் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.24 - நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படைத்தளபதி கேப்டன் லட்சுமி மரணமடைந்தது குறித்து சமத்துவ மக்கள் ​கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  உருவாக்கிய இராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய பெருமைமிக்க கேப்டன் லட்சுமியின் மறைவு நமக்கெல்லாம் அதிர்ச்சியை அளித்துள்ளது. டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு தன் இறுதிக்காலம் வரை மருத்துவ சேவையை புரிந்துவந்தவர் கேப்டன் லட்சுமி. இந்திய தேசத்தின் மீது மாறாத பற்று கொண்ட அவர் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் ஆயுதம் ஏந்தி பெண்கள் பிரிவில் தலைமை ஏற்று பெண்களுக்கெல்லாம் நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் கேப்டன் லட்சுமி கலந்து கொண்டுள்ளதை பெருமையாக கருதுகிறோம் நாட்டுப்பற்று மக்கள்  சேவைக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எஸ்.ஷேக்தாவூத்:

 

1914-ம் ஆண்டு சென்னையிலேயே பிறந்தவர் கேப்டன் லட்சுமி சேகல், இந்தியத்தாயின் வீரப்புதல்வியாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையில் கேப்டனாக பணியாற்றியவர்.

தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். அன்னாரின் மறைவு தமிழர்களின் வரலாற்றில் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால்வாடும் குடும்பத்தார்களுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டன் லட்சுமி சேகல் அவர்களது ஆத்மா இறைவனது திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago