முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியேட்டரில் துப்பாக்கி சூடு: அதிபர் ஒபாமா ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

வாஷிங்டன்,ஜூலை.24 - அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் டென்வர் நகரில் ஒரு சினிமா  தியேட்டரில்  மர்மநபர் புகுந்து சரமாரியாக துப்பாகியால் சுட்டதில் 12 பேர் பலியாயினர். 70 பேர் படுகாயமடைந்தனர்.  இது தொடர்பாக ஜேம்ஸ்ஹோம்ஸ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அவனது வீட்டில் சோதனை போட்டதில் வெடிபொருட்கள் குவியல் குவியலாக பகதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை ரோபோ மூலம் அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பங்களுக்கு அதிபர் ஒபாமா ஆறுதல் கூற வரவிருக்கிறார்.மேலும் படுகாயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். கொலோரடோ துப்பாக்கி சூட்டை  தொடர்ந்து தனி நபர் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்போவதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்