முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.ஆர்.ரகுமான் அலுவலகத்தில் புகுந்த வாலிபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.3 -பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அலுவலகத்தில் புகுந்து உதவியாளரை மிரட்டிய பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானின் அலுவலகம் கோடம்பாக்கம் சுப்பராயன் நகர் 5 வது தெருவில் உள்ளது. இந்த அலுவலக  தொலைபேசியில் பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ரகுமானிடம் பேச வேண்டும் எனக் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் பீகாரிலிருந்து சென்னை வந்த அந்த வாலிபர், நான் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தே ஆக வேண்டும், அவர் இசையமைத்த ஜெய்கோ பாடலை நான் தான் இயற்றினேன். அவர் அதற்கு இசையமைத்து ஆஸ்கர் விருதை தட்டிச் சென்று விட்டார். அவரை பார்த்து பேச வேண்டும் என வற்புறுத்தினார். அலுவலக உதவியாளர் பைசுதீன், ரகுமான் ஊரில் இல்லையென்று கூறி வாலிபரை அனுப்பி வைக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாலிபர் ரகுமானை சந்திக்க விடாமல் செய்தால் உங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். நேற்று காலை ரகுமானின் அலுவலக ஊழியர்கள் பீகார் வாலிபரை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் அப்ரோல் ரசுல்கான் (28) என்பதும், பீகார் மாநிலம், லோரா பஜார் கோட் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தான் ஒரு கவிஞன் எனக் கூறும் ரசுல்கான் கைவசம் 2 பாடல்கள் உள்ளதாகவும், அதற்கு ரகுமானின் இசையை அமைக்காமல் போக மாட்டேன் என்றும் கூறி வருகிறார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்