முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும் - விஜயகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு,ஏப்.3 - நடக்கவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெறும். ஜெயலலிதாதான் முதல்வராக பதவி ஏற்பார் என்று விஜயகாந்த் உறுதிபடக்கூறினார். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.மு.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு வாக்கு சேகரித்து ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் பேசியதாவது:-

ஈரோடு பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியபோது அ.தி.மு.க. கூட்டணியில் 2 தலைவர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க.வையும் தே.மு.தி.க.வையும் பிரிக்கும் நோக்கத்தில் கருணாநிதி இப்படியெல்லாம் பேசி வருகிறார். எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்தவும் முடியாது. 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெறும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர்தான் முதல்வராக பதவி ஏற்பார். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கிராப்பிக்ஸ் காட்சிகளை டி.வி.யில் காண்பித்து மக்களை குழப்புகிறார்கள். சபாநாயகரை நான் அடிப்பேன் என்று கூறுகிறார்கள். இந்த விஜயகாந்த்துக்கு சபை நாகரீகம் தெரியும். எனக்கு கோபம் வந்தால் அடிப்பேன். குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது போல் இதுவும் இயற்கையான விஷயம்தான். 

அ.தி.மு.க. கூட்டணி மக்களுக்கு நல்லது செய்வதற்கான கூட்டணியாகும். ஜெயலலிதா முதல்வராகி மக்களுக்கு நன்மைகளை செய்வார். இந்த விஜயகாந்த் இந்த மக்களுக்காக வாழ்ந்தான் என்ற பெயரே போதுமானது. 6-வது முறையாக முதல்வராக வந்து மக்களுக்கு இதை செய்வேன்ய... அதை செய்வேன் என்கிறார் கருணாநிதி. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மக்கள் முன்னேறத்திற்கு என்ன செய்தார்? கருணாநிதி ஆட்சிக்கு ஜீரோ மார்க் போட்ட  டாக்டர் ராமதாஸ், இப்போது கருணாநிதி அருகில் உட்கார்ந்திருக்கிறார். அதுவும் சிரித்துக்கொண்டியிருக்கிறார். உங்கள் கூட்டணியில் யார் காலை யார் வாரலாம்  என எண்ணிக்கொண்டு ஒற்றுமையாக இருப்பதுபோல் தோற்றமளிக்கலாம். ஆனால் எங்கள் கூட்டணியில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒற்றுமையாக இருக்கிறார்கள். விலைவாசி உயர்வை குறைக்க, நாடு நலம் பெற முரசு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago