முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைக்கும்

வியாழக்கிழமை, 26 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 26 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு 5 பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புவதாக, இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணிக்கு 5 பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணிக்கு, பல விளையாட்டுகளின் மூலம் 5 பதக்கங்களாவது கிடைக்கும் என்று நம்புகிறேன். எனது மகனுக்கு செஸ் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் உள்ளதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அவனது விருப்பத்தை பொறுத்து முடிவு எடுக்க அவனுக்கு வாய்ப்பு கொடுப்பேன். எனக்கு செஸ் போட்டியி?ல் விருப்பம் இருந்தது, எனது பெற்றோருக்கு கூட தெரியாமல் தான் இருந்தது.

இந்த காலத்தில் செஸ் போட்டிகளை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. செஸ் போட்டியில் விளையாடுவதை கற்று கொள்ளவும் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் நான் செஸ் போட்டியை ஆட ஆர்வம் கொண்ட போது, இப்படி எளிதான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. செஸ் பயிற்சி பெறுவதற்காக கிளப்புகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த காலத்தில் ஒருவருக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் இருந்தால், இணையதளத்தின் மூலம் கூட விளையாட முடிகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்