முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இன்று ஜெயலலிதா தீவிர பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.3 - அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் இன்று வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்கிறார். 

வரும் 13-ம் தேதி நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (3-ம் தேதி) காலை நெல்லை, தென்காசி, சிவகாசியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அவர் தூத்துக்குடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுரை வருகிறார். மதுரை நத்தம் ரோட்டில் உள்ள ஆயுதப்படை பட்டாலியன் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து வேனில் புறப்படுகிறார். அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி சார்பில் நூற்றுக்கணக்கான பெண்கள் புடைசூழ பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. மேலும் யானைகளுடன் தாரை தம்பட்டங்கள் முழுங்க சிறப்பான வரவேற்பு மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அளிக்கப்படுகிறது. பின்னர்  ஜெயலலிதா பிரசார வேனில் புறப்பட்டு அவுட்போஸ்ட் தல்லாகுளம், கோரிப்பாளையம் தேவர் சிலை, செல்லூர் பாலம் ஸ்டேசன் வழியாக செல்கிறார். வழிநெடுக அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் அருள்தாஸ்புரம் , பாத்திமா கல்லூரி சந்திப்பு,தீக்கதிர் ஆபீஸ், குரு தியேட்டர் பாலம் வழியாக காளவாசல் சந்திப்பை சென்றடைகிறார். சுமார் மாலை 5 மணி அளவில் காளவாசலை அடையும் ஜெயலலிதா, அங்கு மதுரை மேற்குகொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ, வடக்குத்தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.கே. போஸ், மத்திய தொகுதி  தே.மு.தி.க. வேட்பாளர் சுந்தரராஜன், மதுரை தெற்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து பிரசார வாகனத்தில் புறப்படும் ஜெயலலிதா காளவாசல், அரசரடி, புதுஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் ஆலை பாலம் வழியாக சிம்மக்கல், யானைக்கல், வைகை மேம்பாலம், கோரிப்பாளையம், தல்லாகுளம் வழியாக சென்று அழகர்கோயில் ரோட்டில் உள்ள சங்கம் ஓட்டலை அடைந்து அங்கு இரவில் தங்குகிறார். 

ஜெயலலிதா மதுரை வருகை குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் கே.ராஜூ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்திற்காக இன்று மாலை 4 மணி அளவில் மதுரை வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பும், அ.தி.மு.க. மகளிரணி சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பும் அளிக்கப்படுகிறது. மதுரை நகரில் பிரசாரம் செய்யும் ஜெயலலிதாவுக்கு ஆங்காங்கே சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்க மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி  நிர்வாகிகள், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக வந்து கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago