முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30-வது ஒலிம்பிக் திருவிழா லண்டனில் இன்று துவக்கம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 27 -  பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விளையா  ட்டுத் திருவிழாவான 30-வது ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது.  உலக விளையாட்டு ரசிகர்களால் மிகவு ம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் இன்று பிரமாண்டமாக துவங்க இருக்கிறது. 

இந்த துவக்க நிகழ்ச்சி இங்கிலாந்து நா  ட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் சிறப்பாக நடக்க இருக்கிற து. இதற்காக பிரமாண்டமான ஏற்பா டுகளை நிர்வாகம் செய்து உள்ளது. 

இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போ து இதில் பங்கேற்கும் அனைத்து நாடுக ளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு ம், ஒலிம்பிக் போட்டி துவக்கத்தை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி அணி வகுப்பும் நடைபெற உள்ளது. 

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை காண உலக நாடுகளின் பார்வை முழுவதும் லண்டன் நோக்கியே உள்ளது. 

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த துவக்க விழா மூலம் இங்கிலாந்து நாட்டின் கலைநயமிக்க தொழில் நுணுக்கத்தை கண்டு ரசிக்க லாம். 

இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் பொ றுப்பு பிரபல ஹாலிவுட் சினிமா டைர க்டரான டேனி பாய்ல் மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

இதில் லண்டன் மாநகரம் மற்றும் இங் கிலாந்தின் கலாசாரம் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தவிர, ஒவ்வொரு துவக்க விழா வின் போதும் சர்வதேச ஒலிம்பிக் சங்க த்தின் சார்பிலான கொடி மாற்றம் போன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்றது. 

இந்த ஆண்டுக்கான (2012)ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோ லாகலமாக துவங்குகிறது. அடுத்த மா தம் 12-ம் தேதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடக்கிறது. 

இதில் 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரி வுகளில் போட்டி நடக்கிறது. 

ஒலிம்பிக் ஸ்டேடியம் உள்பட 24 மை தானங்களில் போட்டி நடக்கிறது. 

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார் பில் 13 விளையாட்டுகளில் இருந்து 81 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார் கள். 

இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மிண்ட ன், குத்துச் சண்டை, மல்யுத்தம், வில்வி த்தை ஆகிய விளையாட்டுகளில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங் கம் வென்று வரலாறு படைத்தார். அதோடு குத்துச் சண்டையில் விஜேந்த ர் சிங்கும், மல்யுத்தத்தில் சுஷில் குமா ரும் வெண்கலம் வென்றனர். மொத்த ம் 3 பதக்கம் கிடைத்தது. 

இந்த ஒலிம்பிக்கில் அதை விட கூடுத லாக பதக்கம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது. அதிக பதக் கங்களை வெல்வதில் அமெரிக்கா, ரஷ் யா,சீனா இடையே போட்டி நிலவும். 

இன்றைய துவக்க விழா நிகழ்ச்சி மிகவு ம் பிரமாண்டமாக இருக்கும் என்று எதி ர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இருக்கும். 

ஸ்லம் டாக் மில்லியனர் புகழ் டேனி பாயல் மேற்பார்வையில் துவக்க விழா நடக்கிறது. 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். பிரபல இசைய மைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களும் துவக்க விழாவி ல் இடம் பெறுகின்றன. கால்நடைகளான ஆடு, கோழி மற்றும் குதிரைகள் ஆகியவற்றை வைத்தும் பிரமிப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி லண்ட னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒலிம்பிக், கிரா மங்களில் வரலாறு காணாத பாதுகாப் பு அளிக்கப்பட்டு உள்ளது. 

18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

லண்டனில் 3-வது முறையாக ஒலிம்பி க் போட்டிகள் நடக்க இருப்பது குறிப் பிடத்தக்கது. இதற்கு முன்பு 1908,1948 -ம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போ  ட்டி நடந்தது. ஒலிம்பிக் போட்டி 3-வது முறையக நடைபெறும் முதல் நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்று உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்