முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபிகா குமாரி தலைமையிலான அணி பதக்கம் பெறுமா?

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 28 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடுதல், மற்றும் வில்வித்தை ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் இன்று துவங்க இருக்கின்றன.  துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய 2 பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் பெற் றுத் தருவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்தியாவில் உள்ள விளையாட்டு ரசி கர்கள் அனைவரின் கண்களும் இந்தி யாவின் முன்னணி வில்வித்தை வீராங் கனையின் மீதே உள்ளது. 

உலக நம்பர் - 1 வீராங்கனையான தீபி கா குமாரி லண்டனில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிச் சென்று உள்ளார். இந்திய மகளிர் அணி ரிக்கர்வ் பிரிவில் நாளை (ஞாயிறு) போட்டியி டுகிறது. 

இந்திய மகளிர் அணி தரப்பில், தீபிகா குமாரி, பாம்பேலா தேவி, செக்ருவுலு சுவி ரோ ஆகிய மூவர் போட்டியிடுகி ன்றனர். 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நட ப்பு சாம்பியனான கொரியா அணியின் கடும் போட்டியை சமாளித்து இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கில் இடம் பிடி த்தது. 

ஆனால் கடந்த வருடம் டூரின் நகரில் நடந்த இந்தப் போட்டியில் தங்கப் பத க்கத்திற்கான உச்ச கட்ட மோதலில் இத்தாலியிடம் இந்திய அணி தோற் றது. 

வில்வித்தைப் போட்டிகள் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவ ங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும் ரேங்கிங் ரவுண்டில் பங்கேற்கும். 

ராஞ்சியில் பிறந்த 18 வயதான தீபிகா லண்டன் போட்டியில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக் கம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 

கடந்த 80 ஆண்டுகால ஒலிம்பிக் வர லாற்றில் இந்திய அணி வில்வித்தையி ல் இதுவரை பதக்கம் வென்றது கிடை யாது. இந்த முறை பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 

இந்தியா இதுவரை ஒலிம்பிக்கில் 9 தங் கம் வென்று உள்ளது. இதில் 8 பதக்கம் ஹாக்கியிலும், 1 சுப்பாக்கி சுடுதலிலும் (அபினவ் பிந்த்ரா) கிடைத்தது. 

தவிர, 1 வெள்ளி, துப்பாக்கி சுடுதலிலு ம் (ராஜ்ய வர்த்தன் சிங் ரதோர்), மேலு ம் 5 வெண்கலப் பதக்கங்களை இதர  பிரிவுகளிலும் பெற்று உள்ளது நினைவு கூறத்தக்கது. 

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமை பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல் லேஸ்வரிக்கு உள்ளது. கடந்த 12 வருட ங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார். 

ஆந்திராவைச் சேர்ந்த அவரைப் பின்ப ற்றி, ஜார்க்கண்டைச் சேர்ந்த 18 வயதா  ன குமாரி தலைமையிலான அணி பதக் கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தீபிகா குமாரி உலக ஜூனியர் சாம்பிய னானாவார். தவிர டெல்லியில் 2010 -ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டி யில் தங்கம் வென்றவராவார். 

2004 -ம் ஆண்டு ஏதென்ஸ் போட்டிக்கு பிறகு, 2- வது முறையாக இந்திய மகளி ர் வில்வித்தை அணி ஒலிம்பிக்கில் நம் பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கோடி க்கணக்கான இந்தியர்களின் கனவை நிறைவேற்றும் பொறுப்பு அவர்களிட ம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்