முக்கிய செய்திகள்

ஊழல்வாதிகளை விரட்டி அடிக்க வேண்டும் - பிரேமலதா

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      ஊழல்
erode  premalatha

 

ஈரோடு,ஏப்.3  - இந்த தேர்தலில் பொதுமக்கள் ஊழல்வாதிகளுக்கு (தி.மு.க.வினர்) கறும்புள்ளி, செம்புள்ளி வைத்து அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக கூறினார்.

 அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தே.மு.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி ஈரோடு கிழக்குத்தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமாருக்கு ஆதரவாக ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பேசியதாவது:-

இந்த மண் பெரியார் பிறந்த மண். இந்த மண்ணை சேர்ந்தவர்கள் ஒரு போதும் துரோகிகளுக்கு துணைபோக மாட்டார்கள். இதை இந்த தேர்தலில் நிச்சயம் நிரூபிப்பார்கள். தமிழக துரோகிகளையும் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர்களையும் இந்த ஈரோட்டு மக்கள், விரட்டி அடிப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தால் தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதை முதல் கடமையாகக்கொண்டு செயல்படுவோம் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, ஜெயலலிதா வழிநடத்தும் கட்சியுடன் விஜயகாந்த் இணைந்திருக்கும் இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் ஊழல்வாதிகளுக்கும் லஞ்சப்பேர்வழிகளுக்கும் இடமில்லை என்பதை நிரூபிக்கும் நாம் செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் நீங்கள் வைக்கும் கறும்புள்ளி ஊழல்வாதிகளுக்கும் லஞ்சப்பேர்வழிகளுக்கும் கறும்புள்ளி செம்புள்ளி வைத்து விரட்டும் தேர்தலாக அமைய வேண்டும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: