முக்கிய செய்திகள்

நரேந்திர மோடியுடன் கருணாநிதியை ஒப்பிடுவதா? இல.கணேசன் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      அரசியல்
Ila Ganesan1 0

திருச்சி. ஏப்.3 - பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியாதாவது:-

மத்திய திமுக அமைச்சர் நடிகர் நெப்போலியன் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கும்போது கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும், குஜராத்தில் நரேந்திரமோடி எப்படி இரண்டாவது முறையாக முதல்வராக வந்தாரோ அதேபோல கருணாநிதியும் மீண்டும் முதல்வராக வருவார் என அவர் கூறி இருக்கிறார். நரேந்திரமோடியுடன் கருணாநிதியை ஒப்பிடுவது தவறானது ஆகும். முதல்வர் நரேந்திரமோடி அவர் மாநில மக்களுக்கு செய்த பல்வேறு திட்டங்கள்தான் மீண்டும் முதல்வராக வருவதற்கு காரணமாக இருந்தது. 

திமுக ஆட்சியில் எந்தவித புது அம்சங்களையும் நாங்கள் பார்க்கவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு பொதுமக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பல்வேறு பாதக அம்சங்கள் தமிழகத்தில் இருக்கிறது. எனவே கருணாநிதியை நரேந்திரமோடியுடன் ஒப்பிடுவதற்கு நடிகர் நெப்போலியனுக்கு அருகதை இல்லை.

இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது. அதேபோல தேர்தல் ஆணையத்தை கருணாநிதி எப்பொழும் விமர்சனம் செய்வது இயற்கைதான். மடியில் கனம் இருந்தால் பயம் எதற்கு. மே 13ந்தேதிக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படலாம். இவ்வாறு இல.கணேசன் நிருபர்களிடம் தெரிவித்தார். பேட்டியின்போது மண்டல பொறுப்பாளர் திருமலை, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் பார்த்திபன், முன்னாள் மாவட்ட தலைவர் இரா.கண்ணன், செய்தி தொடர்பாளர் அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: