முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியவீரர் மனோஜ்குமார் வெற்றி

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஆக. - 2 -  லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் குமார் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.  இந்தப் போட்டியில் அவர் துர்க்மெனி ஸ்தான் வீரர் செர்தாருடன் மோதினார். இதில் அபாரமாக சண்டையிட்ட அவர் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.  30-வது லண்டன் ஒலிம்பிக் போட்டியி ல் குத்துச் சண்டைப் பிரிவில் இந்தியா சார்பில் 7 வீரர்களும், ஒரே வீராங்கனையான மேரிகாமும் பங்கேற்று வருகின்றனர்.  பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெ ண்கலம் வென்ற விஜேந்தர் சிங் (மிடில் வெயிட் பிரிவு), ஜெய் பகவான்(லைட் வெயிட்) ஆகியோர் முதல் சுற்றில் வெ ற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற் றுக்கு தகுதி பெற்றனர்.  ஆனால் பாந்தம் வெயிட் பிரிவில் பங் கேற்ற இளம் வீரரான ஷிவா தாபா மற் றும் லைட் ஹெவி வெயிட்டில் பங்கே ற்ற சுமித் சங்வான் இருவரும் முதல் சுற் றில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.  நேற்று இரண்டு இந்திய வீரர்கள் பங்கே ற்ற போட்டி நடந்தது. லைட் வெல்டர் (64) பிரிவில் நடந்த முதல் சுற்றில் இந் திய வீரர் மனோஜ் குமார் துர்க்மெனி ஸ்தான் வீரர் செர்தாருடன் மோதினார். இதில் மனோஜ் குமார் வெகு நேர்த்தி யாக சண்டையிட்டு 13- 7 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் அவர் இங்கிலாந்து வீரர் தாமஸ் ஸ்டால்சரை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி வருகிற 4-ம் தேதி நட க்க இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்