முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகத்தொகை கொண்ட பரிசுக்கு இந்திய விஞ்ஞானி தேர்வு

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.3 - நோபல் பரிசு தொகையை விட அதிகத் தொகை கொண்ட இயற்பியலுக்கான யூரிமில்னர் பரிசுக்கு, இந்திய விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூரிமில்னர் (50). இவரது சொத்து மதிப்பு ரூ.5,500 கோடியாகும். இதில் அவர், கடந்த 3 ஆண்டுகளில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்களில் ரூ.66,000 கோடியை முதலீடு செய்துள்ளார். ரஷ்ய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த இவர், பட்டம் பொறமலேயே வெளியேறினார். 

அதனால் யூரிமில்னர், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் சிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இதையடுத்து யூரிமில்னர் பன்டமென்ட்டல் பிசிக்ஸ் பரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு, இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான பரிசு பெறும் விஞ்ஞானிகளை மில்னரே தேர்வு செய்துள்ளார். ரூ.16.7கோடி ரொக்கம் அடங்கிய இந்த பரிசுக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அலகாபாத்தில் உள்ள ஹரிஷ் சந்திரா ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணிபுரியும் இயற்பியல் விஞ்ஞானி அசோகே சென்னும் ஒருவர்.

நோபல் பரிசுத் தொகையை விட அதிகத் தொகை கொண்ட இந்த பரிசை பெறும் சென், கொல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியிலும், 1976ல் கான்பூர் ஐஐடியிலும் படித்து விட்டு, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவர், பெர்மிலேப் மற்றும் ஸ்டான்போர்ட்டில் பணிபுரிந்தார். 1995ம் ஆண்டு இந்திய தேசிய அறிவியல் அகாடமிக்கும், 1998ல் ராயல் சொசைட்டி ஆப் லண்டன் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். கடந்த 1994ம் ஆண்டு எஸ்.எஸ்.பட்நாகர் விருதும், 2001ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்