முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக் பார்ப்பதை நிறுத்தி விட்டால் உற்பத்தி திறன் கூடும்...!

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஆக. 3 - அலுவலகங்களில் வேலை பார்ப்போர் தங்களது ஒரு நாளில் இரண்டரை மணி நேரத்தை மெயில் பார்ப்பதற்கும், மெயில் அனுப்புவதற்குமே செலவிடுகிறார்களாம். மெக்கின்சே குளோபல் என்ற நிறுவனம் இதுதொடர்பாக ஒரு சர்வேயை நடத்தியுள்ளது. அதில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது அவர்களின் உற்பத்தித் திறனை இந்த இமெயில்கள் கால்வாசி அளவுக்குக் காலி செய்து விடுகிறதாம்.

ஒரு நாளில் இரண்டரை மணி நேர அளவுக்கு மெயில்களைப் பார்ப்பது, அனுப்புவது, மெயில்களை அழிப்பது என செலவிடுகிறார்களாம் ஊழியர்கள். அலுவலகம் போவோர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 81 நாட்கள் கம்ப்யூட்டர்களிலேயே செலவிடுகிறார்களாம். கம்ப்யூட்டரில் உட்காரும்போது பெரும்பாலும் இ மெயில்களுக்காகத்தான் உட்காருகிறார்களாம். இ மெயில் பார்ப்பது, பேஸ்புக் பார்ப்பது, டிவிட்டருக்குப் போவது போன்றவற்றை நிறுத்தி விட்டால், ஒரு ஊழியரால் அவரது உற்பத்தித் திறனை 25 சதவீத அளவுக்குக் கூட்ட முடியுமாம்.

ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்போர் முடிந்தவரை சக ஊழியர்களுடன் நேரிலேயே பேசுவதை ஊக்கப்படுத்த வேண்டும். மெயில் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தித் திறனை கூட்ட முடியும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்